உத்தர பிரதேசம்: திருமண வயதில் மகள் இருக்கும் நிலையில் அவரின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதன்போது ரூ. 40,000 மற்றும் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்து சென்றிருக்கிறார். இந்நிலையில் நகைகள் இல்லாமல் தனது மகளின் திருமணம் தடைப்பட்டு நிற்பதாக ஓடிப்போன பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மனைவி மற்றும் இளைஞரை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.