ஹைதராபாத்: கள்ளக்காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் அஞ்சிலப்பாவை, ராதா என்ற இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை விட வயதில் குறைந்த இளைஞருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக கணவருடன் சண்டை ஏற்பட்டதில் கொலை செய்திருக்கிறார். கொலையும் செய்துவிட்டு கணவர் சடலத்தை பார்த்து அழுது நடித்த நிலையில் போலீசில் சிக்கினார்.