இங்கிலாந்தை சேர்ந்த சமூக ஊடக பிரபலமான கமீலா டோ ரொசாரியோ என்ற பெண் தாய்மையால் எதிர்கொள்ளும் சவால்களுக்காக கணவரிடம் வரி வசூலித்து வருகிறார். அதன்படி 2 வாரங்களுக்கு ஒருமுறை ரூ. 9000 கணவரிடம் இருந்து பெறுகிறார். இது குறித்து கமீலா கூறுகையில், "எனக்கு இந்த யோசனையை சொன்னவரே என்னுடைய கணவர்தான். அவர் விருப்பத்துடன் தான் எனது பரமரிப்பு செலவுகளுக்கு வரி மூலம் உதவி செய்கிறார்" என கூறினார்.