கர்நாடக மாநிலம் தொட்டபல்லாபுரம் அருகே வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவரை, மனைவி கொலை செய்துள்ளார். பெங்களூருவின் சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர் (40) - ஸ்ருதி தம்பதி. இந்நிலையில், தனது கணவர் வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த ஸ்ருதி, கணவருடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ருதி, கணவரை கொலை செய்தார். பின்னர், குளியலறையில் விழுந்து இறந்துவிட்டதாக ஸ்ருதி நாடகமாடிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.