காதல் கணவர் பேசாததால்மனைவி தற்கொலை

62பார்த்தது
காதல் கணவர் பேசாததால்மனைவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (25), கனிமொழி (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சச்சிகா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற கனிமொழியை வீட்டிற்கு கூப்பிட ஜெயபிரகாஷ் செல்லாமல் அவரது பெற்றோரை அனுப்பியுள்ளார். மேலும் சில நாட்கள் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி