மருத்துவர் மற்றும் நுண்ணுயிரி நிபுணர்கள் கூற்றுப்படி, காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதை தவிர்ப்பதால் நமது கவனம் சிதறும் என ஆய்வுகள் கூறுகின்றன. மாணவர்களும், வேலைக்குச் செல்லும் பெரியவர்களும் காலை உணவை தவிர்க்காமல் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். சிறுதானியங்கள், பழங்கள், முட்டை போன்றவை காலை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.