கீழடி ஆய்வு அறிக்கையில் திருத்தம் கோரி ஒன்றிய அரசு அதை திருப்பி அனுப்பியுள்ளது. போதிய ஆய்வு முடிவுகள் கிடைத்தும் அங்கீகரிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 10) சென்னையில் பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து மேலும், அறிவியல்பூர்வ முடிவுகள் தேவை. அவை கிடைத்த பின்னரே அங்கீகரிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.