சுதந்திரம் கிடைத்த பின்னர் தமிழ்நாட்டில் பல கட்சிகளின் ஆட்சி நடந்தாலும், 5 முறை முதல்வராக கருணாநிதி நேரடியாக பொறுப்பேற்று பணியாற்றி இருக்கிறார். இதனால் தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூகரீதியாக இருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், தமிழ்மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஆட்சியாளராக அதனை நிறைவேற்றியுள்ளார். அதனாலேயே தமிழகத்தின் சிற்பி எனவும் கவனிக்கப்படுகிறார்.