அமாவாசை அன்று சமைக்கும் காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயம் இடம்பெறுவதை நாம் பார்த்திருப்போம். அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். ஏனென்றால், முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் நம் குலமும் சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதை குறிக்க தான் வாழைக்காய் தவறாமல் அந்நாளில் சமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.