டீ கடையை ஏன் திறந்தாய்?.. ஊழியரை வெளுத்த போலீஸ்

85பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர், அங்கு அதிகாலை 4 மணியளவில் டீ கடை திறந்து இருப்பதை பார்த்துள்ளார். உடனே அங்கு சென்ற காவலர், ஏன் இந்த நேரத்தில் கடையை திறந்தாய்? என கூறி ஊழியர் வீரமணியை தாக்கியுள்ளார். மேலும், கடையை அடித்து நொறுக்கிடுவதாக மிரட்டியுள்ளார். குற்றச்சம்பவங்களை குறைப்பதற்காக காலை 5 மணிக்கு தான் கடைகளை திறக்கவேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி