தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இன்று (ஜூன் 9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேளாண் துறைக்கு இளைஞர்கள் செல்லாதது ஏன்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "வேளாண் துறையில் 365 நாள் வேலை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதேபோல் அதிக சம்பளம் கொடுக்கும் திறனும் அதில் இல்லை. அதனால் தான் வேளாண் அல்லாத துறைக்கு இளைஞர்கள் செல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.