புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது கன்றுடன் கூடிய பசுவை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். கோமாதா புதுமனையில் வருவது, லட்சுமி தேவியே இல்லத்தில் எழுந்தருள்வது போன்றதாகும். இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய் நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாகும். வீட்டிற்குள் வரும் பசுவிற்கு ஒரு வாய்ப்புல் கொடுத்து, அங்கேயே கோமியம் இட வைத்தால் இன்னும் சிறப்பு என கூறப்படுகிறது.