வட்ட வடிவிலான கிணறுகள் வலிமையான அடித்தளத்தை கொண்டுள்ளது. இதில் மூலைகள் இல்லாத காரணத்தால் கிணற்றை சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும். கிணறு சதுரமாக இருந்தால் 4 மூலைகளிலும் தண்ணீரின் அழுத்தம் ஏற்பட்டு கிணற்றில் மண் சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே சீரான அழுத்தம் இருப்பதற்காகவே கிணறு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தோண்டுவதன் மூலம் கிணறு அமைக்கப்படுவதால் வட்ட வடிவத்தில் அமைப்பது மிகவும் எளிதானது.