அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு, தன் மகனை பலியிட நபி தயாராக இருந்ததை நினைவுப்படுத்தும் நாளாக பக்ரீத் இருக்கிறது. இது, அவருக்கு அல்லாஹ் மீதிருந்த அசைக்க முடியாத பக்தியை காட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது. அல்லாஹ்வின் நம்பிக்கையால் அவர் தனக்கு மிக முக்கியமான ஒரு நபரை தியாகம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது இந்த நம்பிக்கையை பார்த்து வியந்த அல்லாஹ், அவரது மகனுக்கு பதிலாக ஆட்டை பலியிட கொடுத்ததாக சொல்லப்படுகிறது.