மதுரையில் நடந்த பெமி 9 நிகழ்ச்சியில் நேற்று (ஜன. 10) கலந்து கொண்ட நடிகை நயன்தாரா "யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்து கொண்டாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம். கடுமையாக உழைத்தால் தன்னம்பிக்கை வரும். அது வந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும், நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் இல்லை" என பேசினார்.