நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஜூன். 03) இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் கோப்பையை எதிர்நோக்கி பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 36 முறை மோதியதில் தலா 18 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன. இந்த சீசனில் 3 முறை மோதின. இதில் பெங்களூரு 2, பஞ்சாப் 1இல் வென்றன. அகமதாபாத் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமானது.