அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்ற அறிவிப்பு இன்று (ஜூன் 1) பிற்பகலுக்குள் வெளியாகிறது. இரண்டு வேட்பாளர்கள் யார்? என்பது தொடர்பான அறிவிப்பை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். ஜெயக்குமார், சதன்பிரபாகர், விந்தியா, இன்பதுரை, ராஜசத்யன் ஆகியோர் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பல தரப்பினர் சீட்டு கேட்டு வந்த நிலையில் இறுதி முடிவை எடுத்த எடப்பாடி பழனிசாமி அவர்களது பெயர்களை இன்று அறிவிக்கவுள்ளார்.