தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “யார் தூங்கி கொண்டிருந்தது என்பதற்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பை சொல்லலாம்” என பதிலடி கொடுத்தார்.