அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யார் அந்த சார்? என்ற வாதத்துக்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, "குற்றம் நடந்த நேரத்தில் ஞானசேகரன் தனது செல்போனை Airplane Modeல் வைத்திருந்தது தடயவியல் ஆய்வு, Airtel Network நிறுவனம் கொடுத்த அறிக்கையில் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 06.15 முதல் 08.51 வரை போன் Flight Modeல் இருந்தது" என தெரிவித்துள்ளார். எந்த சாரும் வழக்கில் இல்லை.