திருச்சி: லால்குடி ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி பாட்ஷா (எ) ராஜ்குமார் வீட்டிற்கு இன்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணா வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், 2024 மக்களவை தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என கேள்வியெழுப்பினர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார். நாட்டு மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று நன்றாக வாழ வேண்டும். குழந்தைகள், பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் என்று சத்திய நாராயணா கேட்டுக் கொண்டார்.