யாரெல்லாம் முகக்கவசம் அணியலாம்? விளக்கம்

76பார்த்தது
யாரெல்லாம் முகக்கவசம் அணியலாம்? விளக்கம்
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், கர்ப்பிணிகள், வயது மூத்தவர்கள், இணை நோய் பிரச்சனை உடையோர் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "நோய் பாதிப்பு உடையவர்கள் தங்களை அறியாமல் இருமல், தும்மலை மேற்கொள்ளலாம். ஆகையால், இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களுக்கு சென்றால் முகக்கவசம் அணியுங்கள். சுத்தமாக இருப்பது நல்லது" என கூறினார்.