ஜூலை 24, 2025ம் தேதியுடன் காலியாகும் 6 மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திமுகவின் சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணி மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.