நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூருவை, எதிர்கொள்ளப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை அணியை பஞ்சாப் வீழ்த்தியது. இதன்மூலம் இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை (ஜூன். 03) நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. 18 வருட காத்திருப்பு முடிந்து இதில் ஒரு அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல போகிறது.