அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உ.பி., முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,210 உடன் மேற்கு வங்கம் 2-வது இடத்திலும், ரூ.20,011 சராசரி மாதச் சம்பளத்துடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாதச் சம்பளம் ரூ.19,600 ஆகும். கர்நாடகா தமிழகத்திற்கு அடுத்தபடியாக 8-வது இடத்தில் உள்ளது.