தமிழகம் எங்கே போகிறது? - அன்புமணி சரமாரி கேள்வி

53பார்த்தது
தமிழகம் எங்கே போகிறது? - அன்புமணி சரமாரி கேள்வி
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் 8ஆம் வகுப்பு மாணவன் வெட்டியுள்ள நிலையில், தமிழகம் எங்கே போகிறது? என்று பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி