வருங்கால வைப்பு நிதி என்று சொல்லக்கூடிய PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் வரும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக டெபிட் கார்டு வழங்கும் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை வழங்கும் EPFO 3.0 என்கிற செயலியை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.