புதிதாக ரேஷன் அட்டைகள் விண்ணப்பித்த 57,327 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, அட்டை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், "கடந்த 3 ஆண்டுகளில் 18,09,607 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,67,795 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. அவர்களுக்கும் விரைவில் ரேஷன் அட்டை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.