தேனீ வளர்ப்பின் முன்னோடி அன்டன் ஜானியாவின் பிறந்தநாளில் தேனீக்கள் தினம் மே 20ல் கொண்டாடப்படுகிறது. கடந்த 1734ம் ஆண்டு பிறந்த ஜானியா தேனீக்கள் வளர்ப்பின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். சுற்றுசூழலுக்கு பங்களிக்கும் தேனீக்கள் உட்பட பிற தேனீ இனங்கள் குறித்து விழிப்புணர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் சிறப்பிக்கப்படுகிறது. கடந்த 2017 டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகளில் வழங்கப்பட்ட ஒப்புதலைத் தொடர்ந்து, 2018 மே மாதம் முதல் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.