குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து முன்னாள் முன்னாள் விமானி அருள்மணி தனது கருத்தை பதிவு செய்தார். அவர் விபத்து தொடர்பாக பேசுகையில், "தற்போது விபத்தில் சிக்கிய AI171 போயிங் 787 8 ட்ரீம்லைனர் விமானம் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டது ஆகும். விமானத்தின் எஞ்சின் இயந்திரங்களுக்கு மின்தடை ஏற்பட்டு உந்துசக்தி கிடைக்காததால் விபத்து நடந்திருக்கலாம். இவ்வாறான விமானம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு குறைவு" என தெரிவித்தார்.