கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் மோடி வயநாட்டுக்கு நேரில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், “வயநாட்டில் இயல்புநிலை திரும்பிய பிறகு, பிரதமர் மோடி இப்போது அங்கு சென்று என்ன பயன்?. மக்கள் துன்பத்தில் இருக்கும் போதே சென்றிருக்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.