காலரா மிகக் கொடியது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும். அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை பேணுவதன் மூலம் அதை எளிதில் தடுக்கலாம். காலராவை தடுக்க அரசும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வினியோகம், குளோரின் பயன்படுத்துதல், தண்ணீரை அடிக்கடி சுத்திகரித்து வழங்குதல் போன்றவை அரசு செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். மருத்துவ முகாம்கள் நடத்துவதன் மூலமாக நோய் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம்.