மக்களின் குறைகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் தீர்வுகளை காண புதிய திட்டத்தை செயல்படுத்துகிறார். ஜூலை 15ம் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் சார்பில் தொடங்கி வைக்கப்படும் இத்திட்டத்தில் மக்களின் குறைகள் நேரடியாக மனுக்களாக பெறப்பட்டு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுத்துறையின் சேவையை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.