கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கிய புஞ்சிரமட்டோம் என்ற கிராமத்தின் நிலை என்னவென்று 4 நாட்களாகியும் தற்போது வரை தெரியவில்லை. பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கையைத் தாண்டி மலை மேலே அமைந்திருக்கிறது இந்த புஞ்சிரமட்டோம் கிராமம். ராணுவம் நேற்று பாலம் அமைத்து முடித்த பிறகுதான் முண்டக்கை பகுதிக்கே மீட்பு வாகனங்கள் செல்ல முடிந்தது. இந்நிலையில் புஞ்சிரமட்டோம் சாலை துண்டிக்கப்பட்டிருப்பதால், மீட்பு பணி இன்னும் தாமதமாகும் என கூறப்படுகிறது.