தமிழ்நாட்டில் 6% வாக்கு வங்கியை தக்கவைத்துள்ள பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பு வகித்து வந்தார். அவரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்ட நிலையில், பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நானே தலைவர் என அன்புமணி எதிர்ப்புக்குரல் எழுப்பினார். இதனால் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டு இருதரப்பும் தனியே செயல்பட தொடங்கியது.