தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை மும்தாஜ், சிலரோ எனக்கு மார்க்கெட் போய்விட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு மார்க்கெட் போய்விட்டது என்று. என்னைவிட வயது மிகுந்த பெண்கள் இன்றும் நன்றாக ஒர்க் அவுட் செய்து தன்னை அழகாக காண்பித்து கிளாமராக வலம் வருகிறார்கள். அல்லா எனக்கு வழிகாட்டவில்லை என்றால் நானும் அவர்களை போலத்தான் இப்போது செய்து கொண்டிருந்திருப்பேன் என கூறியுள்ளார்.