நடிகர் கமல் ஹாசனின் கர்நாடக மொழி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தக் ஃலைப் படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், "மன்னிப்பு கேட்காமல் கமல் ஏன் சுற்றிவளைத்து பேசுகிறார்?. கமல் கன்னடத்தை மதிப்பாக கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மன்னிப்பு என்ற வார்த்தை கடிதத்தில் இடம்பெறாதது ஏன்?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ?" என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.