சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடையில் பணிபுரியும் முகமது இத்ரிஸ் என்பவரின் கொட்டாக் மகேந்திரா வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி இருப்பதாக வந்த மெசேஜால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முகமது இத்ரிஸின் வங்கிக் கணக்கை கோட்டக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று தஞ்சையை சேர்ந்த கணேசன் என்பவரின் கொட்டாக் மகேந்திரா வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்தது குறிப்பிடத்தக்கது.