போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவரது தாய்மாமா பாலமுருகன், போலீஸ் அடித்ததால் நவீன் காலில் கடுமையான வலி இருந்துள்ளது. இன்று காலை நவீன் போன் செய்து, மாமா எனக்கு கால் கடுமையாக வலிக்கிறது என்று கூறினான். அதன் காரணமாக, நவீனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என பேட்டியளித்துள்ளார்.