மூளைக்கட்டி வளரும் இடம், அளவு, வேகத்தைப்பொறுத்து அதன் அறிகுறிகளும் மாறுபடும். மூளைத்திசுவில் கட்டி நேரடியாக நுழைவதன் காரணமாக பார்வை பாதிப்பு, உடல் இயக்கத்தில் பிரச்சனை, பேச்சு குறைபாடு, நினைவு குறைபாடு, செவித்திறன் பாதிப்பு, நமது உடல் நடத்தை போன்றவற்றில் மாற்றம் ஏற்படும். உடலின் உள்ளுறுப்புகள் சேதமாவதால் மூளைக்கட்டி மரணத்துக்கு இணையான உடல் பிரச்சனையை கொடுத்து இறுதியில் மரணத்தையும் ஏற்படுத்தும்.