செங்கல்பட்டு அருகே காவலரை ஆபாசமாக பேசிய மது போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்த நாகராஜ் ( 42) என்பவர் மது போதையில் வாகனத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், கூவத்தூர் E5 காவல்துறையினர் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் நாகராஜ் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனால். வாகனத்தை கைப்பற்றிய காவலர்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல் நிலையம் வந்த நாகராஜ் காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.