ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோப்பையை பெங்களூரு அணி முதல்முறையாக கைப்பற்றியது. இந்நிலையில், RCB அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “WELL DONE RCB, பல ஆச்சர்யங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்தக் கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்" என்றார்.