இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜின் திருமணம் நவம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று ஜூன்.08 லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, நவ.18 அன்று திருமண தேதி குறித்துள்ளதாகவும், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பிரியாவின் தந்தை தூஃபானி சரோஜ் தெரிவித்துள்ளார்.