பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன., 25) வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் வரும் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.