தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி ராஜீவ் காந்தி நகரில் உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழாவில் இன்று(ஜூன் 4) கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், அதில் வீரியம் இல்லை. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.