கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் கூட்டம் கூடும் இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதுவரை தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.