"தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்"

58பார்த்தது
"தமிழர் உரிமை மீட்போம்!   தமிழ்நாடு காப்போம்"
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதன்மை முழக்கத்தினை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இதுகுறித்து, தனது எக்ஸ் பதிவில், இன்றைக்கு இந்திய நாடு இருக்கின்ற சூழலில், மாநில உரிமைகள் குறித்து மக்களவையில் உரத்த குரலில் முழங்கி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் இருந்து கழகத்தின் சார்பிலும், கழக கூட்டணி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள், தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கொள்கைக் கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி