பஞ்சாப்பின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமானப்படை வீரர்களிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். “பாரத் மாதா கீ ஜே என்ற வார்த்தைகளின் சக்தியை உலகம் உணர்ந்திருக்கும். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடிப்பணிய மாட்டோம். விமானப்படை வீரர்கள் போர்க்களத்தில் புதிய வரலாறு படைத்துள்ளனர். அவர்களுக்கு என் சல்யூட்" என்றார்.