திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “அதிமுக, பாஜக, புதுசு புதுசா முளைக்குற கட்சிகளுக்கு கிடைக்குற, ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. இது இன்று நேற்று அல்ல 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளுகிற சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்மளுடைய சொல்லாற்றல், எழுத்தாற்றல், மக்கள் நலன் ஆகியவற்ற நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்” என்றார்.