2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் தான் கூட்டணி என திமுக கூறி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் அடுத்து காங்கிரஸ் கட்சி தலைமையில் தான் ஆட்சி. இல்லையென்றால் கூட்டணி இல்லை என்று உறுதியாக இருப்போம். கூட்டணியில் வெளியேறுவோம். மேலும் தனித்து நிற்போம் தன்மானத்தை காப்போம்" என சூளுரைத்துள்ளார்.