'காவிரி நதிநீர் எங்கள் உரிமை' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.